சனி, 14 பிப்ரவரி, 2009

ராமன் எத்தனை ராமனடி




சங்கீத உலகத்தில் திரு. தியாகராஜஸ்வாமிகளைத் தெரியாதவர் இருக்கமுடியாது.ராமபிரான்மீதும் சீதாதேவியின்மீதும் அளவற்றபக்திகொண்டு அதன் பயனாக எளிமையான பாடல்களை சுந்தரத்தெலுங்கில் பாடியவர்.நமக்கு அவை பாடல்களாகத் தோன்றினாலும் அவை உண்மையில் அவருக்கும் ராமருக்கும் இடையே நடந்த உரையாடல்கள்.காசியில் மரிப்பவர்களின் காதில் சிவபெருமான் ராம நாமத்தைச் சொல்லி அவர்களை சொர்கத்திற்கு அழைத்துச்செல்வதாக புராணங்கள் கூறுகின்றன.
அதேபோல், நமது தியாகராஜரும் திருவய்யாற்றில் உள்ள அய்யாறப்பன்
என்கிற பிரணதார்த்திஹரன்,அறம்வளர்த்த நாயகி என்கிற தர்மஸம்வர்த்தனி ஆலயத்தில் சிவன் சந்நிதியில் ஒரு கோடி ராமஜபம் செய்து சித்தி பெற்றவர்.
பல வருடங்களக சங்கீதத்தை கேட்டு அதனால் விளைந்த கேள்வி ஞானத்தினால் சில பாடல்களுக்கு விளக்கம் சொல்லாம் என்று முயற்சிக்கிறேன்.


இடை இடையே பத்ராசல ராமதாசர் , அருநாச்சலகவிராயார், அருணகிரியார், போன்றவர்களும் ராமனை எப்படி அனுபவித்தார்கள் என்ற ஒப்பு நோக்குதலையும் அளிக்கப்படும்.
படிப்பவர்கள் தங்களது கருத்துக்களையும்,குறைகளையும், வழக்கம் போல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முழுமுதற்க்கடவுளாம்,விநாயகனை தொழுது, வணங்கி ஆரம்பம்
.

ராகம்; சௌராஷ்டிரம் தாளம்: ஆதி


ஸ்ரீ கணபதினி ஸேவிம்பராரே
ச்ரித மான்வுலாரா (ஸ்ரீ )

வாகதிபதி ஸுபூஜல் ஜேகொனி
பாக நடிம்புசுகொனு வெடலின் (ஸ்ரீ )

பனஸ நாரிகேளாதி ஜம்பூ
பலமுலனாரகிஞ்சி
கனதரம்புகனு மஹிபை பதமுலு
கல்லு கல்லன நுஞ்சி
அனயமுனு ஸ்ரீ ஹரி சரண்யுகமுலனு
ஹிருதயாம்புஜமுன நுஞ்சி
வினயமுனனு த்யாகராஜ வினுதுடு
விவதகதுல தித்தளங்குமனி வெடலின (ஸ்ரீ
)

இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல மனிதர்களே வரங்களை அள்ளித்தரும் கணபதியை வணங்கிச்செல்ல வாருங்கள்.
வாக்குக்கு அதிபதியான ஸரஸ்வதியின் கணவரான பிரும்மாவினாலும் மற்ற தேவர்களாலும் மிக நேர்த்தியகச் செய்யப்பட்ட பூஜையை ஏற்றுக்கொண்டு அதனால் உண்டாகிய சந்தோஷத்தால் மனமுவந்து தானே அழகாக நடனம் ஆடிக்கொண்டுவரும் நர்த்தன கணபதியை வணங்குவோம் வாருங்கள்

எளியதகவும் எங்கும் சிரமமில்லாமலும் கிடைக்ககூடிய பலாக்காய், தேங்காய்,நாகப்பழம் போன்றவற்றை அமுதமான உணவாகக்கொண்டும்,இந்தப்புண்ணிய பூமியின் மீது கால்களில் உள்ள சலங்கைகள் "ஜல் ஜல்" என்று ஸ்ப்தம் செய்ய நடனமாடிக்கொண்டும் அல்லும் பகலும் அனவரதமும் சரணாகதவத்சலனான மால்மருகனான முருகனின் மாமனாகிய மஹா விஷ்ணுவின் பதாரவிந்தங்களை தன்னுடைய ஹிருதயத்தில் வைத்துக்கொண்டும்,மிக விநயமுள்ள இந்த தியாகராஜனால் வணங்கப்படிகின்றவரும்,விதவிதமான தாளகதிகளுக்கு ஏற்ப "தித்தளாங்கு" என மலர்ந்தமுகத்துடன் ஆடிக்கொண்டு வரும்
அந்த கண்பதியை ஸேவிப்போம் வாருங்கள் நல்ல மனிதர்களே.


இந்தக் கீர்த்தனையை ஸ்வாமிகள் நௌக சரித்தரம் என்ற நாடககீர்த்தனையில்(opera) முதல் கீர்த்தனையாக செய்தார். இதுபோன்ற நாடகங்களுக்கு ஒரு வரைமுறை உண்டு எந்த ராகத்தில் ஆரம்பிக்கப் பட்டதோ அதே ராகத்தில்தான் முடிக்க வேண்டும் . அதே மாதிரி ஸ்வாமிகளும் சௌராஷ்ட்ர ராகத்தில் ஆரம்பித்து கடைசியில் அதே சௌராஷ்ட்ர ராகத்தில் எல்லா கச்சேரிகளிலும் மங்களம் பாடுகிறார்களே "ராஜீவ நயனத்யாகராஜதி வினுதமைன"" முடிக்கிறார்.
தியாகராஜரின் அழைப்பை ஏற்று வாருங்கள்! வணங்குவோம் கணபதியை! .
பாடலைக் கேட்க
இங்கே செல்லவும்





-


http://www.youtube.com/watch?v=i1Kmj-TasOU

17 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் திராச!
    கண்ணன் பாட்டு போல இராமன் பாட்டா? கலக்குங்க! :)

    //ஸேவிம்ப ராரே//

    சேவிக்க வரோம்! வரோம்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஆரம்பம்....அடுத்தடுத்த பதிவுகளுக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. //எந்த ராகத்தில் ஆரம்பிக்கப் பட்டதோ அதே ராகத்தில்தான் முடிக்க வேண்டும்//

    இதைப் போல நுண்ணிய தகவல்களுடன் வழக்கம் போல அருமையான பாடல்களை அனுபவிக்க காத்து இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  4. கோலாட்டம் ஜோரா இருக்கு!
    பாடல் அருமையான கற்பனை.

    //நாடககீர்த்தனையில்(opera) முதல் கீர்த்தனையாக செய்தார். இதுபோன்ற நாடகங்களுக்கு ஒரு வரைமுறை உண்டு எந்த ராகத்தில் ஆரம்பிக்கப் பட்டதோ அதே ராகத்தில்தான் முடிக்க வேண்டும்//

    புது தகவல் எனக்கு.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பதிவின் முதல் இராகமே சௌராஷ்ட்ர இராகமா? அருமை. :-)

    நௌகா சரித்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் தி.ரா.ச. என்ன கதை அது? நௌகா சரித்திரத்தின் தொடக்கமும் முடிவும் சௌராஷ்ட்ர இராகமா? ஒரு வேளை தன் சீடர் வேங்கடரமண பாகவதரைப் பெருமைப்படுத்த அப்படி செய்திருப்பாரோ? :-)

    பதிலளிநீக்கு
  6. புது வலைப்பூ தொடருக்கு வாழ்த்துகள். இன்னொரு இசை விருந்தா !

    அது என்ன blogspotblogspotcom.blogspot ???
    பெயருக்கு பஞ்சம் வந்து விட்டதா என்ன :))

    பதிலளிநீக்கு
  7. வாங்க மௌலி சார். மெதுவாக கேளுங்கள் கணபதி அருள் கிடைக்கட்டும்

    பதிலளிநீக்கு
  8. வாங்க ரவி. ஆடும் கணபதியை தரிசனம் செய்த பிறகு ராமனை அனுபவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க கபீரன்பன். வருகைக்கு நன்றி. பூக்களுக்கு பஞ்சம் இல்லை என் தொழில் நுட்பம்தான் பஞ்சம். மாறி விடுகிறென்.

    பதிலளிநீக்கு
  10. குமரன். நௌக சரித்ரம் என்னும் நாடகத்தில் கண்ணனின் பிருந்தவன லீலைகளை பாடலாக விவரித்துள்ளார். 5 பகுதிகள் கொண்டது. இதே போல் பிரஹலாத பக்த விஜயம், சீத ராம சரித்ரம் போன்ற நாடகங்களும் படைத்துள்ளார்.தியகராஜர் 5 இடங்களில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடியுள்ளார். திருவையாறு-- முதன்மை பஞ்சரத்னம் ஜகதா நந்தக'.. என்று தொடங்குமே அது. லால்குடியில்-- பார்வதியின் மீது 5 கீர்த்தனைகள், சென்னையில் திருவற்றியூரில் வடிவுடைய அம்மன் மீது 5 கீர்த்தனைகள்,சென்னை கோவுரில் சிவன் மீது 5 கீர்த்தனைகள். ச்ரீ ரங்கத்தில் ரங்கநாதன் மீது 5 கீர்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  11. திவா சார் வங்கோ. இது ஆசு கவி மட்டுமல்ல ஆண்டவன் அளித்த கவி. கற்பனைக்கு என்ன குறை?
    யாரென்ன சொன்னாலும் மனமே அஞ்சாதே ஐய்யன் புகழை பாடு முடிந்தால் அளவோடும் ஜதியோடும் ஆடு.அதானிது.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கு நன்றி அம்பி. நீங்களெல்லாம் இருக்கும் தைர்யம்தான் ஆரம்பித்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  13. பிள்ளையார் நல்லா ஆடறார். நல்லா இருக்கு. புது பதிவு ஆரம்பிச்சதே இன்னிக்குத் தான் தெரியும். உங்க சிதம்பர ரகசியம் பதிவைத் தேடி வந்ததுக்கு இது கிடைச்சது. நன்றி. எல்லாம் தமிழ், அனைத்தும் தமிழ்? அதுவும் நல்லா இருக்கு,

    பதிலளிநீக்கு
  14. அட, பின்னூட்டங்கள் சோதனை எல்லாம் இல்லையா??? சரிதான்.

    பதிலளிநீக்கு
  15. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

    * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

    * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.


    * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    * போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    பதிலளிநீக்கு
  16. இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல மனிதர்களே வரங்களை அள்ளித்தரும் கணபதியை வணங்கிச்செல்ல வாருங்கள்.

    அருமையான நிறைவான பாடல் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு